Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யும் விஜய் சேதுபதியும் - புலிக்கு பயப்படுவாரா ரவுடி?

விஜய்யும் விஜய் சேதுபதியும் - புலிக்கு பயப்படுவாரா ரவுடி?
, புதன், 2 செப்டம்பர் 2015 (16:25 IST)
செப்டம்பர் 17 புலி வெளியாகவில்லை என்றதும் ரஜினி முருகன் உள்பட அரை டஜன் படங்கள் அந்த தேதியை கர்ச்சீப் போட்டு அமுக்கிவிட்டன.
 

 
அதேநேரம், அக்டோபர் ஒன்று படத்தை வெளியிடலாம் என்று நினைத்தவர்களின் வயிற்றில் புளிக்கரைசல். அன்றுதான் புலி வெளியாகிறது.
 
விஜய் படம் வெளியாகிறது என்றால், சொல்லாமலே இரண்டுவார இடைவெளி எடுத்துக் கொள்வார்கள் சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள். வீம்புக்கு வெளியிட்டு நஷ்டமடைய வேண்டாமே என்ற நல்லெண்ணம்தான் காரணம்.
 
புலி அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அன்றுதான் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள நானும் ரவுடிதான் படத்தை வெளியிடுவதாக இருந்தனர்.
 
புலி வருவதால் தேதியை மாற்றுவதா இல்லை ரவுடிக்குரிய கெத்துடன் புலியை எதிர்கொள்வதா என்று பலமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil