Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையிலும் மலேசியாவிலும் மாறி மாறி ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும் விஜய் சேதுபதி!

Webdunia
சனி, 27 மே 2023 (08:00 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தை இயக்கி தயாரித்தார் ஆறுமுக குமார். அந்த படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் அவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இந்தபடம் தொடங்கப்படுவதில் தாமதம் ஆன நிலையில் இன்று மலேசியாவில் வைத்து இந்த படம் தொடங்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

இந்த ஷூட்டிங்குக்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் விஜய் சேதுபதி, மதுரை உசிலம்பட்டியில் இயக்குனர் மணிகண்டன் இயக்கி வரும் ஒரு வெப் சீரிஸ் ஷூட்டிங்கில் கலந்துகொண்டாராம். அங்கிருந்து நேராக மலேசியா சென்று அங்கு இப்போது நடித்து வருகிறாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments