Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘ராட்சச சக்கரம் எவ்வளவு வேகமா மேலப் போகுதே… அதே வேகத்துல கீழ வந்துடும்ல’ – ரசிகர்களைக் கவரும் மெரி கிறிஸ்துமஸ் டிரைலர்!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (08:42 IST)
தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம்  ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். அவர் இயக்கிய பட்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதிலும் அந்தாதூன் உலகளவில் புகழ் பெற்ற படமாக மாறியது. இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்போது அவர் விஜய் சேதுபதி மற்றும் காத்ரினா கைஃப் ஆகியோர் நடிப்பில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் படத்தின் பின்  தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படத்தில் தமிழ் பேசும் நபராகவே விஜய் சேதுபதி நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவரின் உரையாடல்களை காத்ரினா கைஃபுக்கு மொழி பெயர்த்து சொல்லும் கதாபாத்திரத்தில் நடிகை தீபா வெங்கட் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜனவரி 12 ஆம் தேதி ரிலிஸாக உள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் காத்ரினா கைஃப் ஆகிய இருவரும் அழகான ஒரு காதலில் ஈடுபட வாழக்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது, எல்லாமே உடையும் விதமாக நடக்கும் சம்பவங்களே கதை எனத் தெரிகிறது. டிரைலரில் டைம் டிராவல் பற்றிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதால் கதைக்களமும் டைம் டிராவல் பற்றியதாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments