Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

vinoth
ஞாயிறு, 16 ஜூன் 2024 (18:20 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா இன்று வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் ரிலீஸாகி படத்தின்  மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை என்பதால் இந்த வெற்றி அவருக்கு மிகவும் முக்கியமானதாக அமையும். படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், அதிலும் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற நிலையில் முதல் நாளில் நல்ல வசூலை கலெக்ட் செய்தது. கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் அளவுக்கு முதல் நாளில் வசூலித்த இந்த படம் இரண்டாவது நாளான சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் 9 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. நான்கு நாட்களில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை எட்டும் என சொல்லப்படுகிறது. முதல் முதலாக 100 கோடி ரூபாய் வசூலிக்கும் படமாக மகாராஜா அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments