அக்டோபரில் மாமனிதன் – டபுள் ட்ரீட் கொடுக்கும் விஜய் சேதுபதி !

Webdunia
ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (10:31 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே முடிந்தது.

ஆனால் ரிலிஸாகாமல் இருந்த மாமனிதன் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படம் வெளியாகவுள்ள நிலையில் இப்போது மாமனிதன் படமும் வெளியாவதால் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையவுள்ளது.
முதன் முதலாக இந்த படத்துக்காக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சேர்ந்து இசையமைக்கின்றனர். இந்த படத்தை யுவனே தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரி ரிலீஸுக்குத் தயாரான அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments