Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி-கார்த்திக்சுப்புராஜ் படத்தில் விஜய்சேதுபதி வில்லனா?

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (02:05 IST)
கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அதில் விஜய் சேதுபதி இல்லாமல் இருக்க முடியாது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரஜினிகாந்த் - சன் பிக்சர்ஸ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘இறைவி’ மற்றும் ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களில் விஜய்சேதுபதி நடித்துள்ளதால் இந்த படத்திலும் அவர் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் 'விக்ரம் வேதா' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளதால் இந்த படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. ரஜினியுடன் விஜய்சேதுபதி நடிக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments