Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதி பட நடிகை கொரொனா நிவாரண நிதியுதவி !

Webdunia
புதன், 19 மே 2021 (16:10 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை நிதி அகர்வால் கொரோனா தடுப்புப் பணிக்காக நிதி வழங்கியுள்ளனர்.

கனா, கபெ.ரணசிங்கம், காக்காமுட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் இந்தியன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங்கில் ஐஸ்வர்யா ராஜேஷிக்கும் ராகுல் ரவீந்தரனுக்கும் திருமணம் நடப்பது போன்ற புகைப்படஙக்ள் சமீபத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரொனா தடுப்பு நிவாரணமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நிதிஉதவி செய்துள்ளார்.


ஏற்கனவே, நடிகர் சிவக்குமார்- சூர்யா - கார்த்தி குடும்பத்தினர் இணைந்து ரூ.1 கோடி நிவாரண நிதியை ஸ்டாலினிடம் வழங்கினர். இதையடுத்து, இன்று நடிகரும்  எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ரூ. லட்சத்திற்காக காசோலையை முதல்வர் ஸ்டாலிடம் வழங்கினார். அதேபோல் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கினார்.

இன்று,  முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை நிதி அகர்வால் ஆகியோர் தலா ரூ.1 லட்சம் ரூபாய் கொரோனா தடுப்புப் பணிக்காக நிதி வழங்கியுள்ளனர்.

மேலும், தற்போது கொரொனா ஊரடங்கு காலம் என்பதால் வேலையின்றி வீட்டில் முடங்கியுள்ள மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவு நோக்கில் பெப்சி அமைப்புக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். இவரது செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அஞ்சாமை திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

பாலாவின் ’வணங்கான்’ ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலான போஸ் கொடுத்த சமந்தா!

அடுத்த கட்டுரையில்
Show comments