மீண்டும் தாணு தயாரிப்பில் படம் நடிக்கும் விஜய் சேதுபதி!

vinoth
வியாழன், 26 டிசம்பர் 2024 (09:54 IST)
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு ’டிரைன்’ என்ற முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்துக்காக சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ட்ரெயின் செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் மிஷ்கின்.

இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார். மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி தாணு தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments