Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியுடன் போட்டியிட்டு ஜெயிப்பாரா விதார்த்?

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (17:23 IST)
விஜய் சேதுபதி மற்றும் விதார்த் நடித்த படங்கள், வருகிற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளன.


 

 
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘புரியாத புதிர்’. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக காயத்ரி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ரமேஷ் திலக் நடித்துள்ளார். சைக்கலாஜிக்கல் த்ரில்லரான இந்தப் படத்துக்கு முதலில் ‘மெல்லிசை’ என்று பெயர் வைக்கப்பட்டு, பின்னர் ‘புரியாத புதிர்’ என்று மாற்றப்பட்டது. இந்தப் படம் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.
 
பாரதிராஜா, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘குரங்கு பொம்மை’ படமும் வெள்ளிக்கிழமை தான் ரிலீஸாகிறது. இந்தப் படத்தை நித்திலன் இயக்கியுள்ளார். ‘விக்ரம் வேதா’வுக்குப் பிறகு விஜய் சேதுபதியின் மார்க்கெட் இன்னும் பெரிதாகியிருப்பதால், அவருடன் போட்டிபோட்டு விதார்த் ஜெயிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் ரீசண்ட் புகைப்படத் தொகுப்பு!

ஹோம்லி லுக்கில் க்யூட்டாக ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

பாட்டு நல்லா இல்லைன்னு சொன்னதும் கேப்டன் ஷாக் ஆகிட்டாரு… ’ஆட்டமா தேரோட்டமா’ சீக்ரெட்டைப் பகிர்ந்த செல்வமணி!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இணையும் சிரஞ்சீவி…!

‘அயலான்’ ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் நடிக்கும் சூரி?

அடுத்த கட்டுரையில்
Show comments