Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி & டாப்ஸி நடிக்கும் படத்தின் பெயர் இதுதான்… வெளியான ரகசியம்!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (18:08 IST)
விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு என்னவென்பது வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக முடங்கி இருந்த தமிழ் சினிமா உலகம் அரசு அனுமதி அளித்ததை அடுத்து இப்போது லேசாக சுறுசுறுப்பு அடைய ஆரம்பித்துள்ளது. சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டு இருந்த நிலையில் இப்போது ஜெய்ப்பூருக்கு கிளம்பியுள்ளார் விஜய் சேதுபதி.

இதன் மூலம் கொரோனாவுக்கு பின் படப்பிடிப்பில் முதலில் கலந்துகொள்ளும் கதாநாயகன் என்ற பெருமையை பெறுகிறார் விஜய் சேதுபதி. டாப்ஸி நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி குடும்பத்தோடு ஜெய்ப்பூர் சென்றுள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பெயர் என்னவென்பது தெரியவந்துள்ளது. இந்த படத்துக்கு அனபெல் சுப்ரமண்யம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானும் ஹன்சிகாவும் பிரிந்து வாழ்கிறோமா?... கணவர் சோஹைல் கட்டாரி தெரிவித்த பதில்!

மறைந்த ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு பா ரஞ்சித் நிதியுதவி அறிவிப்பு!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு.. முதல் சிங்கிள் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாக டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டைப் பயிற்சி கலைஞர் மோகன் ராஜ் குடும்பத்திற்கு நடிகர் சிலம்பரசன் நிதியுதவி

அடுத்த கட்டுரையில்
Show comments