Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விண்ணை தாண்டி வருவாயா 2’ படத்தில் விஜய்சேதுபதியா?

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (16:30 IST)
’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை நினைத்தவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது சிம்பு மற்றும் த்ரிஷாவின் அற்புதமான நடிப்பு தான். சிம்புவை மறந்து விட்டு அந்த படத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் இயக்குனர் கௌதம் மேன’னின் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை தயார் செய்து வைத்து விட்டதாகவும் அந்த படத்தில் சிம்புவுக்கு பதில் விஜய் சேதுபதி நடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது 
 
விஜய் சேதுபதி இந்த படத்தின் கதையை கேட்ட நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அதே நேரத்தில் ’விண்ணைத்தாண்டி வருவாயா 2’ என்ற டைட்டில் வேண்டாம் என்றும், வேறு டைட்டிலில் நடிக்கிறேன் என்று கூறியதாகவும் தெரிகிறது. மேலும் ‘விண்ணை தாண்டி வருவாயா’ என்ற படத்தின் டைட்டில் சிம்புவுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றும் அவரை தவிர வேறு யாரும் அந்த அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தால் பொருத்தம் இருக்காது என்றும் விஜய் சேதுபதி கௌதம் மேனனிடம் கூறியதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் வேறு டைட்டிலில் ’விண்ணை தாண்டி வருவாயா  படம் உருவாகினாலும் கார்த்திக், ஜெஸ்ஸி கேரக்டர்கள் தான் இந்த திரைக்கதையில் இருப்பதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது 
 
விஜய் சேதுபதி ஏற்கனவே ஒருடஜனுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்திற்கும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments