Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ திரைப்படம் துபாய், புர்ஜ் கலிஃபாவில் கொண்டாடப்பட்டது!

J.Durai
சனி, 8 ஜூன் 2024 (10:29 IST)
சிறப்பான கதைகளைத் தேர்தெடுத்து அதனை உயர்தரமான தயாரிப்பு மதிப்பீட்டுடன் தமிழ் சினிமாவுக்கு பேஷன் ஸ்டுடியோஸ் வழங்கி வருகிறது.  ’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து இன்னும் நல்ல திரைப்படங்களை வழங்க இருக்கிறது. 
 
அந்த வகையில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான ’மகாராஜா’ வர்த்தக ரீதியாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. கவனம் ஈர்க்கும் காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கு இந்தப் படம் ஜூன் 14, 2024 அன்று வெளியாகிறது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதால், இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவின் ‘மகாராஜா’ திரைப்படம் இடம்பெறும் நிகழ்வை பேஷன் ஸ்டுடியோஸ் நடத்தியது.
 
நடிகர் விஜய் சேதுபதி எப்போதுமே துபாய் மக்களிடம் இருந்து அபரிமிதமான அன்பையும் ஆதரவையும் பெற்று வருகிறார். 
 
விஜய் சேதுபதி தனது ஆரம்ப நாட்களை துபாயில் கழித்ததால், இந்த நாட்டு மக்களிடமிருந்து விருந்தோம்பல் மற்றும் பாசத்தைப் பெற ஒருபோதும் தவறவில்லை. நேற்று மாலை (ஜூன் 6), புர்ஜ் கலிஃபாவில் பிரமிக்க வைக்கும் ’மகாராஜா’ படம் இடம்பெற்றிருந்ததை அங்கிருந்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். 
 
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் அனுராக் கஷ்யப் கலந்து கொண்டார் மற்றும் நிகழ்வில் படக்குழுவினரும் இருந்தனர். 
 
’தி ரூட்’டின் ஜெகதீஷ் பழனிசாமியுடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் தயாரித்துள்ள படம் ’மகாராஜா’. இப்படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார்.
 
இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments