Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளவரசியாக 3 மணி நேரம் எடுத்துக் கொண்ட ஹன்சிகா

இளவரசியாக 3 மணி நேரம் எடுத்துக் கொண்ட ஹன்சிகா
, திங்கள், 27 ஜூலை 2015 (09:30 IST)
புலி படத்தில் இளவரசியாக நடித்துள்ளார் ஹன்சிகா. இளவரசியாக மாற தினமும் அவருக்கு 3 மணி நேரம் தேவைப்பட்டிருக்கிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி, ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் புலியில் நடித்துள்ளனர். சரித்திரகதையாக உருவாகியிருக்கும் புலியில், நாம் எதிர்பார்க்காத ஃபேண்டஸி அம்சங்களும் உள்ளன. இதனால், படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. 
 
இந்தப் படத்தில் இளவரசியாக வருகிறார், ஹன்சிகா. ராணியாக ஸ்ரீதேவி. இளவரசியாக மாற தினமும் ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப் போட்டிருக்கிறார்கள். அத்துடன் பட்டுச்சேலை, ஆபரணங்கள் என்று எக்ஸ்ட்ரா எடை வேறு. ஹன்சிகாவின் இளவரசி தோற்றத்தைப் பார்த்து ஸ்ரீதேவியே அசந்து போனதாக கூறுகிறது யூனிட்.
 
சும்மாவே தேவதை போலிருப்பார் ஹன்சிகா. அவரை இளவரசியாக காட்ட மூன்று மணி நேரமா? சும்மா வந்து நின்றாலே அவர் இளவரசிதானேப்பா.

Share this Story:

Follow Webdunia tamil