Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் மெர்சல் படத்தை கிண்டல் செய்த பிரபல இயக்குநர்

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (11:45 IST)
இயக்குநர் வெங்கட் பிரபு, விஜய்யின் மெர்சல் படத்தை பார்த்து கிண்டல் செய்துள்ளார். அபூர்வ சகோதரர்கள் உள்பட ஒரு சில படங்களில் இருந்து கதையை சுட்டு அதை ஒன்று சேர்த்து மெர்சலாக எடுத்துள்ளார் இயக்குநர் அட்லீ என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். 

 
இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு மெர்சலை கிண்டல் செய்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் மெர்சல் ஒரு திருவிழா விருந்து. அருமையான தழுவல், சிறப்பாக அளித்துள்ளார் அட்லீ. என்ன ஒரு ப்ரொடக்ஷன் வேல்யூ. மேலும் பஞ்சு சாருக்கு கிரெடிட்?! என்று ட்வீட்டியுள்ளார் வெங்கட் பிரபு.
 
1989ஆம் ஆண்டு கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பஞ்சு அருணாச்சலம் கதை எழுதியிருந்தார். அந்த கதையை அட்லீ சுட்டுவிட்டார் என்று இலை மறைவாக காய் மறைவாக கூரியிருக்கிறார் வெங்கட் பிரபு.
 
வெங்கட் பிரபுவின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன் ஒருவர் தற்போது அட்லீயின் நிலைமை இப்படிதான் என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர் நீங்க இத்தாலியன் ஜாப் காட்சிகளை காப்பி அடித்து மங்காத்தா எடுத்தீங்களே! அப்போ ட்ராய் கென்னடி  மார்ட்டினுக்கு கிரெடிட் கொடுத்தீங்களா? எதுக்கு இப்படி... என்று ரீ ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments