Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் விஜயின் புதிய படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜயின் புதிய படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியீடு
, புதன், 25 நவம்பர் 2015 (16:50 IST)
நடிகர் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் அப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.


 
 
விஜய் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, இயக்குனர் மகேந்திரன், ராதிகா ஆகியோர் நடித்துள்ளனர், இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜீன் மாதமே தொடங்கியது. ஆனால் தலைப்பு எதுவும் அப்போது தீர்மானிக்கப்படவில்லை. 
 
இன்று அப்படத்தின் தலைப்பு “தெறி” என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியிட்டுள்ளனர்.
 
நடிகர் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தலைப்பு மற்றும் முதல் போஸ்டரை பதிவு செய்துள்ளார். விஜய் ரசிகர்கள் இதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil