''சீதா ராமம்'' படத்தை மிஸ் செய்த விஜய் பட நடிகை

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (19:53 IST)
சீதா ராமம் படத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியது விஜய் பட ஹீரோயின் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள நடிகர்  துல்கர் சல்மானின் நடிப்பில்   நேற்று வெளியான படம் சீதா ராமம். இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களுக்கு இப்படம் பிடித்துள்ளது.

இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் தாகுர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தில் முதலில் நடிப்பதற்காக பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால், பூஜா ஹெக்டேவுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை.

அவருக்காகப் படப்பிடிப்பை தள்ளிப்போட முடியாது என்பதால், மிருணாள் தாக்கூரை ஒப்பந்தம் செய்தனர். இவருக்கு இப்படம் நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்

ரீரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments