Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மல்லையாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

Webdunia
புதன், 30 மே 2018 (18:58 IST)
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப் போகின்றனர்.

 
மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் பிறந்தவர் விஜய் மல்லையா. தொழிலதிபரின் மகனாகப் பிறந்த இவரும் தொழிலதிபராகவும் அரசியல்வாதியாகவும் இருந்தார். பிரபல பீர் நிறுவனமான ‘கிங் பிஷர்’, இவருக்குச் சொந்தமானது தான். 
 
அதுமட்டுமல்ல, ‘கிங் பிஷர்’ காலண்டர், உலக அளவில் புகழ்பெற்றது. பண மோசடி வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தவர் விஜய் மல்லையா. அதன்பிறகு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார். அவர் இப்போது எங்கிருக்கிறார் என்றே கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பாலிவுட்டில் படமாக்க இருக்கின்றனர். விஜய் மல்லையா வேடத்தில் கோவிந்தா நடிக்கிறார். பாலஜ் நிஹலானி இந்தப் படத்தை இயக்குவதோடு, தயாரிக்கவும் செய்கிறார். விஜய் மல்லையா பற்றிய பல ரகசியங்கள் இந்தப் படத்தின் மூலம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

திடீரென சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ்… காரணம் என்ன?

துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் கிரேட் எஸ்கேப்பா?... தக் லைஃப் பார்த்த ரசிகர்கள் கருத்து!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments