Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தாவுடன் மேஜிக் செய்ய தயாராகிவிட்ட இளையதளபதி

Webdunia
திங்கள், 15 மே 2017 (22:17 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் உள்ள மாசிடோனியாவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால் உள்பட பலர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வாரம் படக்குழுவினர் சென்னை திரும்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



 


இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூன் முதல் வாரம் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து செய்தி வெளிவதுள்ளது.

இந்த படத்தில் பஞ்சாயத்து தலைவர், டாக்டர் மற்றும் மேஜிக்மேன் என மூன்று வேடங்களில் நடித்து வரும் விஜய், மூன்றாவது கேரக்டரான மேஜிக்மேன் காட்சிகளின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பினர் தெரிவித்தனர். இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் சமந்தா கலந்து கொள்ளவுள்ளார். சமந்தாவுடன் விஜய் செய்யவுள்ள மேஜிக் காட்சிகள் இதுவரை தமிழ்த்திரையுலகம் பார்த்திராதது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொங்கலுக்கு முன்னதாகவே ரிலீஸ் ஆகும் பாலாவின் வணங்கான்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிறுநீரகப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன்!

’புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற இளம் பெண் நெரிசலில் சிக்கி பலி.. குழந்தை மயக்கம்..!

ஹன்சிகாவின் லேட்ட்ஸ்ட் ஹாட் புகைப்பட ஆல்பம்!

விண்டேஜ் லுக்கில் ஜொலிக்கும் அனுபமா பரமேஸ்வரன்!... கார்ஜியஸ் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments