Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம்… பின்னணி என்ன?

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (17:22 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் கௌதம் மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்துள்ளார்.

காஷ்மீரில் இருந்து சமீபத்தில் சென்னை திரும்பியது படக்குழு. இதையடுத்து சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு இன்று அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது ஒருவாரம் தாமதமாக அடுத்த வாரம்தான் சென்னை ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்த ரிசல்ட் தான் காரணம்” ; ‘சாமானியன்’ ராமராஜன்!

புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற விரும்புகிறேன்-பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்!

‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments