லியோ படத்தின் இசை வெளியீடு எப்போது?... தயாரிப்பாளர் லலித் கொடுத்த அப்டேட்!

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (16:23 IST)
வாரிசு படத்துக்கு பிறகு நடிகர் விஜய் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்க செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாக உள்ளது. நான் ரெடி வரவா என்ற அந்த பாடலை அனிருத் இசையில் விஜய்யே பாடியுள்ளார். லோகேஷின் இணை இயக்குனர் விஷ்ணு எடாவன் இந்த பாடலை எழுதியுள்ளார்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்திடம் படத்தின் ஆடியோ ரிலீஸ் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “இசை வெளியீடு எங்கே எப்போது என்பது குறித்து இன்னும் 15 நாட்களில் அறிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகமான ஒன்றாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments