Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புன்னா என்ன தெரியுமா? விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இதுதான்!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (11:59 IST)
நேற்று நடந்த வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி ஒன்றை சொல்லியுள்ளார் நடிகர் விஜய்.

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வாரிசு. இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் நேற்று சென்னையில் கோலாகலமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. சமீப காலமாக நடிகர் விஜய் தனது பட இசை வெளியீட்டு விழாக்களில் ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அப்படியாக இந்த விழாவிலும் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லியுள்ளார். “ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை வாழ்ந்து வருகின்றனர். தினமும் வேலைக்கு செல்லும் அப்பா தன் இரண்டு குழந்தைகளுக்கும் சாக்லேட் வாங்கி வருவார். தங்கச்சி அந்த சாக்லேட்டை அப்போதே தின்று விடுவாள். ஆனால் அண்ணன் அதை மறுநாள் பள்ளிக்கூடம் போகும்போது சாப்பிடலாம் என ஒரு இடத்தில் வைப்பான். அதையும் அந்த தங்கச்சி எடுத்து சாப்பிட்டு விடுவாள். இது தினமும் நடக்கிறது.

ALSO READ: விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார்: நடிகர் சரத்குமார்

ஒருநாள் தங்கச்சி தன் அண்ணனிடம் ‘அன்பு அன்புன்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன அண்ணா?’ என கேட்கிறார். அதற்கு அண்ணன் ‘நீ உன்னோட சாக்லேட்டையும் சாப்பிடுற, மறைச்சு வெக்கிற என்னோட சாக்லேட்டையும் சாப்பிடுற. ஆனாலும் அது தெரிஞ்சும் அதே இடத்துல தினமும் சாக்லேட் வைக்கிறேன்ல, அதுதான்மா அன்பு’ என கூறுகிறான். அன்புதான் உலத்தை வெல்லும் ஆயுதம்” என விஜய் குட்டி ஸ்டோரியை முடிக்க ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தான் நடித்த கேரக்டரின் பெயரை நிஜ பெயராக மாற்றி கொண்டா நடிகர் சாம்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்..!

ஸ்டைலிஷான உடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கார்ஜியஸ் கேர்ள் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

ரிலீஸ் தேதியை உறுதி செய்த பாலகிருஷ்ணாவின் ‘அகாண்டா 2’ படக்குழு!

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா… இரண்டாம் பாகத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments