எம் ஜி ஆரின் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளதா விஜய்யின் ஜனநாயகன் படக்குழு?

vinoth
வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (17:41 IST)
GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. சென்னை பனையூரில் உள்ள ஸ்டுடியோவில் முழுப் படமும் படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தீபாவளியை ஒட்டி இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘தளபதி கச்சேரி’ என்ற பாடல் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் எம்ஜிஆரின் ஐகானிக் பாடலான ‘நான் ஆணையிட்டால்’ பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உன்னை அடிச்சுப் போட்டுட்டு பிக்பாஸ விட்டு போயிடுவேன்! தர்பீஸ் மேல் பாய்ந்த FJ! Biggboss Season 9

நீல நிற சேலையில் ஜொலிக்கும் சமந்தா… வாவ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த மிருனாள் தாக்கூர்!

நான் ராமராஜனுக்காகதான் அந்தக் கதையை எழுதினேன்… பல வருடங்கள் கழித்து மிஷ்கின் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments