விஜய் விஷ வளையத்தில் சிக்கியுள்ளார் ... அவரை காப்பாற்ற முயற்சிக்கிறேன் - விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (15:32 IST)
விஜய் ஒரு விஷ வளையத்தில் தற்போது சிக்கியிருப்பதாகவும் அவரைக் காப்பாற்றவே தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களாகவே நடிகர் விஜய்யும் அவரது அப்பாவுக்கு அரசியல் கட்சித் தொடங்குவதில் கருத்துவேறுபாடு இருப்பாதாக ஊடகங்கள் ஊகித்து வந்த நிலையில் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் நேற்று இதுகுறித்து விளக்கமாகக் கூறியுள்ளார்.

அதில், விஜய்யின் தந்தை தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை அதிலிருந்து நான் விலகி விட்டேன்.

அரசியல் பேச வேண்டாம் என பலமுறை எஸ்.ஏ.சியிடம் கூறியிருந்த போதிலும் அதைக் கேட்காததால் விஜய் அவரிடம் பேசுவதில்லை.

அசோசியேஷன் தொடங்குவதாக என்னிடம் எஸ்.ஏ.சி கையெழுத்துப் பெற்றார். ஆனால் கட்சி தொடங்குதாக அவர் என்னிடம் இரண்டு முறை கையெழுத்துப் போடுமாறு கேட்டபோதும் நான் போடவில்லை அதனால் அக்கட்சியின் பொருளாளர் பொறுப்பிலிருந்து நான் விலகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசியல் கட்சித் தொடங்குவதில் முனைப்பாகவுள்ள  எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று, விஜய் என்னை சிறைக்கு அனுப்பட்டும் அது ஒரு சரித்திர நிகழ்வாகவே இருக்கும் என தெரித்துள்ளார்.

மேலும், விஜய் ஒரு விஷ வளையத்தில் தற்போது சிக்கியிருப்பதாகவும் அவரைக் காப்பாற்றவே தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை அவராகவே வெளியிட்டது இல்லை என்று மற்றொரு அதிர்ச்சி செய்தியைத் தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய்யின் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி-அல்லு அர்ஜுன் படத்துக்காக சாய் அப்யங்கர் பெற்ற சம்பளம் இத்தனை கோடியா?

‘மகுடம்’ இயக்குனரைக் காக்கவைத்து அவமானப்படுத்திய விஷால்…!

டியூட் படத்தின் அதிரி புதிரி ஹிட்… மீண்டும் இணையும் ப்ரதீப் & மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட்டம்… அவமானப்படுத்திய நபர்… சூரி கொடுத்த ‘நச்’ பதில்!

நான் விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினர்… சமந்தா வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments