Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் - சர்ச்சையை கிளப்பியுள்ள எமி ஜாக்சன்

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் - சர்ச்சையை கிளப்பியுள்ள எமி ஜாக்சன்
, சனி, 28 நவம்பர் 2015 (13:34 IST)
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார். இதனால் மேலும் அஜித் - விஜய் ரசிகர்களுக்குடையே மோதலை உருவாக்கியுள்ளது.
 

 

 
எமி ஜாக்சன் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய்யின் 59ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் தெறி என்று டைட்டில் வைத்தனர்.

இந்த டைட்டில் வேதாளம் படத்தில் அஜித் உச்சரிக்கும் தெறிக்க விடலாமா என்ற வசனத்தை தழுவி வைக்கப்பட்ட  டைட்டில் ஆகும். இந்த டைட்டில் வைக்கப்பட்ட  நாள் முதல் அஜித் - விஜய் ரசிகர்களுக்குடையே  முகநூல் பக்கங்களில் வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது.
 
webdunia

 
இந்நிலையில் எமி ஜாக்சன் தனது டுவிட்டர்  பக்கத்தில், விஜய் களமிறங்கி விட்டார் என்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்றும் கூறியுள்ளார்.
 
இதற்கு முன்பாக அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்  தான் என்று சில வார பத்திரிக்கைகளில் கருத்துக் கணிப்பு வெளியானதால் அஜித் ரசிகர்கள் அதிர்ப்தி அடைந்து இருந்தனர்.

இந்நிலையில் எமியின் இந்த அறிவிப்பால் அஜித் - விஜய் ரசிகர்களுக்குடையே முகநூல் பக்கங்களில் வார்த்தை யுத்தத்தை உருவாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil