Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் படத்தில் ‘’ ரீ எண்ட்ரீ ’’ஆகும் விஜய் பட நடிகை

Webdunia
புதன், 20 மே 2020 (22:16 IST)
ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை ஜெனிலியா. அதன்பிறகு அவர் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் ரித்தேஷ் தேஸ்முக்கை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

இந்நிலையில்,  கடந்த வருடம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் பிரிதிவிராஜ் இயக்கத்தில்வெளியான சூப்பர் ஹிட்டான லூசிபர் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இந்தப் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.

சாஹோ என்ற பிரமாண்ட படத்தை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கவுள்ளார். மலையாளத்தில் மஞ்சு வாரியார் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிகை ஜெனிலியா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments