Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ? - தீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் சர்கார்!

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (12:05 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய்,  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் `சர்கார்' படத்தை தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
சர்கார் படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  நவம்பர் 6-ந் தேதி திரைக்கு வரும் என்று முன்னதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். 
 
இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னதாகவே வருகிற 2-ந் தேதி அன்றே ‘சர்கார்’ படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. 2-ந் தேதி வெள்ளிக்கிழமை என்பதாலும் தொடர்ந்து விடுமுறையாக இருப்பதை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு  முன்னதாக படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
எனவே இந்த வாரத்திலேயே சர்க்கார் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்புகிறார்கள். ‘சர்கார்’ படத்தில் ராதாரவி, வரலட்சுமி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் . 
 
சமீபத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர். சர்க்கார் தீபாவளிக்கு முன்னதாகவே வெளியாக இருப்பதாலும் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதாலும் படத்தின் வசூல் வேற லெவலில் இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments