விஜய் கொடுத்த 5000 ரூபாயை அஜித் ரசிகருக்கு கொடுத்த விஜய் ரசிகர்

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (08:20 IST)
விஜய் கொடுத்த 5000 ரூபாயை அஜித் ரசிகருக்கு கொடுத்த விஜய் ரசிகர்
தளபதி விஜய் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தனது ரசிகர்கள் பலர்  வறுமையில் இருப்பதாக தகவல் அறிந்து உடனடியாக பொருளாதாரரீதியில் பாதிக்கப்பட்டிருக்கும் ரசிகர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அவர்களுக்கு தலா 5,000 ரூபாய் அவர்களுடைய வங்கிக்கணக்கில் அனுப்பினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ரசிகர்களுக்கு விஜய் அனுப்பிய தொகையே பல கோடி என கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இவ்வாறு விஜய்யிடம் இருந்து பெற்ற ரூ.5000ஐ மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகரான நாகராஜ் என்பவர் தனது நண்பரும் அஜித் ரசிகரான சசிகுமார் என்பவர் பெரும் கஷ்டத்தில் இருப்பதை அறிந்து அவருக்கு கொடுத்துள்ளார். மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த அந்த அஜித் ரசிகர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து விஜய் ரசிகர் நாகராஜ் கூறியபோது, ‘ஊரடங்கால் எனக்கும் கஷ்டம் தான். இருப்பினும் என்னைவிட எனது நண்பர் சசிகுமார் அதிக கஷ்டப்படுவதால் தளபதி விஜய் கொடுத்த ரூ.5000 பணத்தை அவருக்கு கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். விஜய், ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் மோதிக்கொண்டாலும் இதுபோன்ற நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments