மாஸ்டர் படத்தில் ஹீரோவின் பெயர் இதுதான் – வெளியானது புகைப்படம் !

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (14:35 IST)
படத்தில் விஜய் பயன்படுத்தும் ஐடி கார்டு

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அவர் நடித்துள்ள கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் சென்சாருக்கு செல்லும் என்றும் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை குறித்து தான் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வந்தது.

இந்நிலையில் படத்தில் விஜய் பேராசிரியர் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஜான் துரைராஜ்’ என்று தெரியவந்துள்ளது. இதுபோலவே படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் படத்தில் பயன்படுத்தும் ஐடி கார்டு புகைப்படம் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments