Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படக்குழுவினருடன் வாரிசு வெற்றியைக் கொண்டாடிய விஜய்…வெளியான புகைப்படங்கள்!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (09:14 IST)
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை ஒட்டி ரிலீஸ் ஆகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில்  வெளியான  படம் வாரிசு. இப்படத்தில் இவருடன் இணைந்து ராஷ்மிகா, குஷ்பு,  பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட  நடிகர்கள் நடித்திருந்தார். இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார். தில்ராஜு தயாரித்துள்ளார். எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் வசூலில் சாதனை படைத்து வருவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்புகளாக வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட கணக்கின் படி 7 நாட்களில் 210 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அறிவித்தது. இந்த கணக்கு நம்பமுடியாததாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வாரிசு படத்தின் வெற்றியை அடுத்து விஜய் படக்குழுவினரோடு இந்த வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments