Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு வருடத்துக்குப் பிறகு மறுபடியும் விஜய் அவார்ட்ஸ்!

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (16:29 IST)
இரண்டு வருடமாக நடைபெறாத விஜய் அவார்ஸ்ட் நிகழ்ச்சி, இந்த வருடம் மறுபடியும் நடைபெற இருக்கிறது.
 
சினிமா கலைஞர்களுக்கு வருடம்தோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது விஜய் டிவி. இதற்காக ‘விஜய் அவார்ட்ஸ்’ என்ற விழாவை நடத்துகிறது. இதுவரை 9 முறை நடந்த இந்த விழா, சிலபல காரணங்களால் கடந்த இரண்டு வருடமாக நடைபெறவில்லை.
 
ஆனால், இந்த வருடம் 10வது ஆண்டாக இந்த விழா நடைபெற இருக்கிறது. இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கே.பாக்யராஜ், அனுராக் காஷ்யப், யூகி சேது மற்றும் நடிகை ராதா ஆகிய ஐந்து பேரும் நடுவர்களாக இருந்து விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
 
வருகிற சனிக்கிழமை பிரமாண்டமாக இந்த விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. நடிகர் – நடிகைகள் உள்பட சினிமாத்துறையினர் கலந்து கொள்ளும் இந்த விழாவில், அஞ்சலி, காஜல் அகர்வால், சயிஷா, ஹரிஷ் கல்யாண் ஆகியோரின் நடன நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் படுகொலை.. சிறிய தகறாரால் விபரீதம்..!

ஸ்ரீ மீண்டும் நடிக்க ஆசைப்பட்டால் நான் அதை செய்வேன் – லோகேஷ் கனகராஜ் பதில்!

ரஜினிக்குக் கௌரவம்..கூலி படத்தில் இணைக்கப்பட்ட 25 வினாடிக் காட்சிகள்…!

சின்னத்திரை வரலாற்றில் முதல்முறை.. கயல், அன்னம், மருமகள் தொடர்கள் இணைப்பு..!

வீட்டு பிரச்சினையை சாதி பிரச்சினையாக சித்தரிப்பு? - கோபி, சுதாகர் மீது கமிஷனரிடம் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments