Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் – அட்லி படத்தில் ஷாருக்கான்? தீயாய் பரவும் தகவல்!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (15:11 IST)
விஜய், அடுத்து லோகேஷ் இயக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

 ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அட்லி, அடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக ஆனார். அதையடுத்து இப்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தை முடித்ததும் அவர் மீண்டும் விஜய்யை இயக்க உள்ளாராம். இந்நிலையில் இந்த படத்தை மிக அதிக பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை சில நாட்களுக்கு முன்னர் நடந்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக உருவாக்க விரும்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், அதற்காக ஷாருக் கானை இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க அட்லியிடம் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

“மிராய்” மூலம் மீண்டும் திரையில், மின்னும் வைரமாக வருகிறான், கருப்பு வாள் வீரன்- ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு!!

கேன்ஸ் ரெட் கார்பெட்டில் ஜொலித்த நடிகர் விஷ்ணு மஞ்சு!

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் 29 மே 2024 அன்று வெளியாகிறது!

மீண்டும் பாஜக ஆட்சி தான்.. 2019ஐ விட அதிக இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர்

என்ன வற்புறுத்தி அந்த படத்துல இழுத்துவிட்டுட்டாங்க! கருடன் படம் குறித்து பேசிய சசிக்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments