பங்குச் சந்தையில் இறங்கும் விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனம்!

vinoth
வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (08:40 IST)
தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அவரது சமீபத்தையப் படங்களில் ‘பிச்சைக்காரன் 2’ தவிர வேறு எதுவும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்போது மீண்டும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிப்பில் அருவி பட இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகும் ‘சக்தி திருமகன்’ திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸாகிறது.

அதன் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் விஜய் ஆண்டனி தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன் –ஐ பங்குச்சந்தைக்குக் கொண்டு சென்று பப்ளிக் நிறுவனமாக மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். நிறுவனத்தில் 50 சதவீதப் பங்குகளை தான் வைத்துக் கொண்டு மீதத்தை விற்கவுள்ளதாகவும், இதன் மூலம் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேந்திரன ஏன் தல மேல தூக்கி வச்சுக் கொண்டாடுறாங்க… அடுத்த சர்ச்சையைக் கிளப்பிய ராஜகுமாரன்!

எல் ஐ கே ரிலீஸில் இருந்த குழப்பம்… புத்திசாலித் தனமாக தப்பித்த தயாரிப்பாளர் லலித் குமார்!

கருப்பு படத் தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிய ’சூர்யா 46’ தயாரிப்பு நிறுவனம்!

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments