Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் முகத்தில் பலத்த அடி… பிளாஸ்டிக் சர்ஜரிக்காக வெளிநாடு செல்கிறாரா விஜய் ஆண்டனி?

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (16:21 IST)
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் உள்ள ஒரு தீவில் நடந்துள்ளது. அதில் கடல் பகுதியில் ‘வாட்டர் ஸ்கூட்டியில்’ அவரும் கதாநாயகியும் செல்வது போன்ற காட்சிகளை படமாக்கியுள்ளனர். அப்போது விஜய் ஆண்டனி ஓட்டிய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு படகின் மீது மோதி, கடலில் கவிழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் தீவிரமான காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் கடலில் விழுந்ததால் கடல் தண்ணீரை குடித்ததால் மூச்சுவிட சிரமப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு இப்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முகத்தில் அடிபட்ட காயங்களுக்காக விஜய் ஆண்டனி வெளிநாட்டுக்கு சென்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments