Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஆண்டனி படத்தின் தலைப்பு மாற்றம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

vinoth
வெள்ளி, 16 மே 2025 (12:51 IST)
தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். அவர் இசையமைக்கும் குத்துப் பாடல்கள் ரசிகர்களுக்கு வேற லெவல் ‘vibe’ கொடுத்தன.இதற்கிடையில் அவர் திடீரென ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது தன் படங்களுக்கேக் கூட இசையமைப்பதை அவர் குறைத்துக் கொண்டுள்ளார்.தற்போது அவர் சக்தி திருமகன் மற்றும் ககன மார்கன் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். ககனமார்க்கன் படத்தை பிரபல படத்தொகுப்பாளரான லியோ ஜான் பால் இயக்குகிறார்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் சகோதரியின் மகன் அஜய் நடிகராக அறிமுகமாகிறாராம். நெகட்டிவ் தன்மை கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ‘ககன மார்கன்’ என்ற தலைப்பை ‘மார்கன்’ என்று மாற்றியுள்ளனர். மேலும் படம் ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைஃப் படத்தின் கதைக்களம் இதுதான்… வெளிநாட்டுத் தணிக்கைக்குப் படக்குழு கொடுத்த Synopsis!

தமிழ்நாட்டில் ‘ரெட்ரோ’ படத்தின் வசூலைக் கடந்த ‘டூரிஸ்ட் பேமிலி’.. தியேட்டர் அதிபர் பகிர்ந்த தகவல்!

சார்பட்டா 2 படத்துக்காக தயாரிப்பாளர் பொறுப்பையும் ஏற்கும் ஆர்யா!

வெப் சீரிஸாக உருவாகும் ‘லட்சுமிகாந்தன் கொலைவழக்கு’… முக்கிய வேடத்தில் நஸ்ரியா!

சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ அர்னால்ட் நடித்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?

அடுத்த கட்டுரையில்
Show comments