Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஆண்டனி வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி: எஸ்.ஏ.சந்திரசேகர்

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2016 (11:16 IST)
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் 'சைத்தான்'. விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர் நடிப்பில் உருவாகிவரும் சைத்தான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் 5 நிமிட படக்காட்சி திரையிடப்பட்டது.

 
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய எஸ். ஏ. சந்திர சேகர், “சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளாரான விஜய் ஆண்டனியிடம் அப்பொழுது உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன். அதற்கு அக்னி என கூறினார். உங்கள் நிஜப்பெயர் விஜய் ஆண்டனி என்ற பெயரே நன்றாக உள்ளது. விஜய் ஆண்டனி என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்துங்கள் என கூறினேன். அவரும் அதற்கு சம்பதித்தார்.
 
விஜய் ஆண்டனியாக இருந்தாலும், என் மகன் விஜயானாலும் சரி,  அவர்களின் வளர்ச்சி கண்டு எனக்கு ஒரே அளவு மகிழ்ச்சி தருகிறது. நான் பெயர் வைத்தவர்கள் சோடை போகவில்லை.” என்று கூறினார் எஸ். ஏ. சந்திர சேகர்.
 
இப்படத்தில் விஜய் ஆண்டனி சைக்காலஜிகல் த்ரில்லராக உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி ஐடி துறையில் வேலை செய்யும் இளைஞராக நடிக்கிறார். சென்னையில் தற்போது முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments