'கொலைகாரன்' படத்தின் 3வது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (19:33 IST)
விஜய் ஆண்டனி, அர்ஜூன் முதல்முறையாக இணைந்து நடித்த 'கொலைகாரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. பின்னர் திடீரென இந்த படம் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த தேதியும் மாற்றப்பட்டு ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியிலாவது இந்த படம் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
கொலை, திகில், சஸ்பென்ஸ், பரபரப்பு ஆகிய அம்சங்கள் நிறைந்த இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நெகட்டிவ் ஹீரோவாக விஜய் ஆண்டனியும் போலீஸ் கேரக்டரில் அர்ஜூனும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
 
மேலும் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் நாயகியாக ஆஷ்மிகாவும் மற்ற முக்கிய கேரக்டர்களில் நாசர், சீதா, சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்ளிட்டோர்களும் நடித்துள்ளனர். சைமன் கிங் இசையில் முகேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments