Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் பட மாஸ் அப்டேட்: விஜய்க்கே இது ஃபர்ஸ்ட் டைம்...!!

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (17:00 IST)
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. 
 
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது.  
 
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாக இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக படம் வெளியாகவில்லை. இந்நிலையில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பட ரிலீஸ் இன்னும் தள்ளிப்போய் உள்ளது. எனவே படம் மே 3-க்கு பிறகே வெளியாகும் என தெரிகிறது.  
 
விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போதைய மாஸ் அப்டேட் என்னெவெனில், மாஸ்டர் திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக ஐநாக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் இதுவே விஜய்யின் முதல் பான் இந்தியா திரைப்படம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments