Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஷ்யாவில் ஒலிப்பதிவு செய்யப்படவிருக்கும் விஜய் படப்பாடல்கள்

ரஷ்யாவில் ஒலிப்பதிவு செய்யப்படவிருக்கும் விஜய் படப்பாடல்கள்
, வியாழன், 27 நவம்பர் 2014 (14:47 IST)
சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதையடுத்து அட்லி இயக்கும் படத்துக்கு கால்ஷீட் தந்துள்ளார்.
 
அட்லியின் படத்துக்கு இசையமைப்பவர் ஜீ.வி.பிரகாஷ்குமார். இது அவரது ஐம்பதாவது படம். இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் பிரகாஷ்குமார், கம்போஸிங் நடந்து கொண்டிருப்பதாகவும், சில பகுதிகளுக்கான ஒலிப்பதிவை ரஷ்யாவின் பராகுவில் நடத்தயிருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஜய்யுடன் நயன்தாரா நடிக்கக்கூடும் என்கிறார்கள். முத்துராஜ் கலை இயக்கத்தை கவனிக்க ஆண்டனி எடிட்டிங் பொறுப்பை ஏற்கிறார். ராஜாராணி, கத்தி படங்களின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் கேமராமேன்.

Share this Story:

Follow Webdunia tamil