Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், அஜித் ரசிகர்களுக்கு ஐஸ் வைத்த விக்ரம்பிரபு

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2017 (12:38 IST)
தன்னுடைய படத்தில் விஜய், அஜித்துக்கு பிளக்ஸ் வைத்துள்ளதன் மூலம், அவர்களுடைய ரசிகர்களுக்கு ஐஸ் வைத்துள்ளார் விக்ரம்பிரபு.


 


அறிமுக இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துவரும் படம் ‘பக்கா’. நிக்கி கல்ரானி, பிந்து மாதவி என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பாண்டிச்சேரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. நேற்று, சென்னை, கிண்டி அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் ஷூட்டிங் நடைபெற்றது. அங்குள்ள ஒரு கோயிலுக்கு அருகில் செட் போட்டு, கோயில் திருவிழா நடப்பது போல் படமாக்கியுள்ளனர்.

அப்போது, திருவிழாவிற்கு வரும் பக்த கோடிகளை விஜய்யும், அஜித்தும் வரவேற்பது போல் தனித்தனி கட் அவுட்களும் வைக்கப்பட்டிருந்தது. பொதுவாக, கிராமங்களில் திருவிழா நடக்கும்போது, தங்கள் நாயகன் அனைவரையும் வரவேற்பது போல் கட் அவுட் வைப்பது ரசிகர்களின் வழக்கம். அதைத்தான் இங்கும் செய்துள்ளனர். எனவே, விஜய், அஜித் ரசிகர்கள் விக்ரம்பிரபுவை வாழ்த்தும் அதேசமயத்தில், இந்தப் படத்தில் தீவிர ரஜினி ரசிகையாக நடித்துள்ளார் நிக்கி கல்ரானி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவின் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுவா? டைட்டிலே வித்தியாசமா இருக்குதே...!

அஜித்தின் அடுத்த படத்தை சிவாஜி புரடொக்சன்ஸ் தயாரிக்கின்றதா? மருமகன் ஆதிக் முயற்சி?

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் இணையும் மணிகண்டன்.. எப்படி ஒப்புக்கொண்டார்?

’கூலி’ இசை வெளியீட்டு தேதி மாற்றப்படுகிறதா? ஜூலையில் இல்லை என தகவல்..!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்ருதிஹாசன்… கண்கவர் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments