நயன்தாரா புகைப்படத்தைப் பகிர்ந்து பெண்கள் தின வாழ்த்துக் கூறிய விக்னேஷ் சிவன்!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (16:22 IST)
இன்று உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய காதலி நயன்தாராவின் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்துக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது. இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் ப்ரமோஷனில் கலந்துகொண்ட நயன்தாரா தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை இருவருமே உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இன்று உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நயன்தாரவின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன் ‘நம் வாழ்க்கையில் உள்ள பெண்களே நம்மை உருவாக்குகிரார்கள். நம்மை முழுமையடைய செய்கிறார்கள். நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறார்கள். இன்று மட்டும் இல்லை எல்லா நாளுமே பெண்கள் தினம்தான். இந்த உலகத்தை பெண்களுக்கான அழகான உலகமாக மாற்றுவோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments