Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் 62? இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அப்டேட்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (12:23 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.

அஜித் இப்போது வலிமை படத்துக்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தில் நயன்தாரா மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்க அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் லைகா நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டது போன்ற போலியான போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று இயக்குனர்  விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஸ்டேட்டஸ் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அஜித்தின் வலிமை படத்தில் தான் எழுதிய வேற மாரி பாடலின் புகைப்படங்களை வைத்து ‘மேல இருக்கறவன நம்ப நல்லா கத்துக்கோ’ எனக் கூறியுள்ளார். இதனால் இன்று இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதாவது வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா மகளின் பட்டமளிப்பு விழா புகைப்படங்கள்.. பெருமையுடன் பகிர்ந்த ஜோதிகா..!

பிரபல நடிகை குளித்த தண்ணீரில் தயாரித்த குளியல் சோப்.. விலை ரூ.700..!

சம்பளத்தில் சந்தானத்தை மிஞ்சிய சூரி.. ஆனால் காமெடியனாக இன்னும் சந்தானம் தான் கெத்து..!

துபாயில் நடைபெற இருக்கும் அஜித் - தனுஷ் சந்திப்பு.. அடுத்த படம் கிளிக் ஆகுமா?

ஆர்த்தி மட்டுமல்ல, கராத்தே பாபு படத்தாலும் சிக்கல்.. ஜெயம் ரவி படு அப்செட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments