விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் மிஷ்கின்!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (08:20 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து ப்ரதீப் நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டிலும் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் என தகவல்கள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்பட்டது. இதற்கான முதல் கட்ட வேலைகள் நடந்து வந்தன. ஆனால் இப்போது படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலக, லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக நடிகர் எஸ் ஜே சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments