Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் நிராகரிக்கப்பட்டேன்: இந்தி சினிமா என் வாழ்க்கையை மாற்றியது – வித்யா பாலன்

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (17:57 IST)
தமிழ் சினிமாவில் பல பட வாய்ப்புகள் தனக்கு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக மனம் திறந்துள்ளார் நடிகை வித்யா பாலன்.

அஜித்குமார் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “நேர்கொண்ட பார்வை”. இந்தி பட ரீமேக்கான இப்படத்தை வினோத் இயக்கியுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் இந்தி நடிகை வித்யா பாலன்.

இதுகுறித்து அவர் பேசும்போது “நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் சிறிய அளவுக்கே இடம்பெறும் கதாப்பாத்திரம் என்றாலும் அஜித் மற்றும் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அஜித்குமார் மிகவும் எளிமையானவர். நான் நேரடியாக நடிக்கும் தமிழ்ப்படம் இது. கபாலியில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது வேறு ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருந்ததால் அந்த வாய்ப்பை தவறவிட்டேன்.

மாதவனுடன் ரன், மனசெல்லாம் போன்ற படங்களுக்கெல்லாம் டெஸ்ட் ஷூட்டுக்கு சென்றேன். ஆனால் நிராகரிக்கப்பட்டேன். அப்போது என் இதயமே நொறுங்கியது போல தோன்றியது. அதற்கு பிறகு ஹிந்தியில் அறிமுகம் ஆனேன். ஹிந்தி சினிமா எனக்கு நல்ல கெரியரை வழங்கியது” என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments