Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆமை வேகத்தில் படமாக்கும் வெற்றிமாறன்… விடுதலை ஷூட்டிங் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (09:36 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துள்ளது.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மற்றுமொரு கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் நடிக்கிறார். மேலும் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இப்போது வரை 60 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதாம். இறுதிகட்ட படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதத்தில் முடிய உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments