Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராசியில்லாத நடிகை என ஓரம்கட்டிய தமிழ் சினிமா… இப்போது கமல் படத்தில் ஹீரோயின்!

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (10:03 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது.

இதன்பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் திரிஷா ஆகியோர் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது கமலுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வித்யா பாலன் தன்னுடைய இளம் வயதில் தமிழ் சினிமாவில் நடிக்க முயற்சி செய்த போது, அவரை ராசியில்லாத நடிகை என முத்திரைக் குத்தி ஒதுக்கியதாக சொல்லப்படுவதுண்டு. அதனால்தான் வளர்ந்த பின்னர் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. தமிழில் முதல் முதலாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யோவ் ஸ்பீடு சும்மாவே இருக்க மாட்டியா? ப்ரான் ப்ரேக்கரிடம் வாங்கிய மரண குத்து! - வைரலாகும் வீடியோ!

விக்னேஷ் சிவன் & ப்ரதீப்பின் LIK படம் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தின் டைட்டிலுக்காகக் காத்திருக்கும் படக்குழு… எப்போது வெளியாகும்?

கிடப்பில் போடப்பட்ட இளையராஜா பயோபிக்… இந்தி சினிமாவுக்கு செல்லும் அருண் மாதேஸ்வரன்!

நான் காப்பி அடித்தேனா?... உலகத்தின் இசைகளை எல்லாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்… இளையராஜா ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments