Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வை மையப்படுத்தி உருவாகும் விதார்த்தின் ‘அஞ்சாமை’ திரைப்படம்!

vinoth
வெள்ளி, 24 மே 2024 (10:02 IST)
மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவந்த மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு விதமான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் நீட் தேர்வுக்கு இன்னமும் எதிர்ப்புகள் உள்ளது. குறிப்பாக அதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வை முன்வைத்து அஞ்சாமை என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை திருச்சித்திரம் நிறுவனம் தயாரிக்க, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தில் விதார்த் மற்றும் வாணி போஜன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தை எஸ் பி சுப்பராமன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. போஸ்டரில் “உயிர்ப்பலி வாங்கிய நீட்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளதால் நீட் தேர்வுக்கு எதிரான படமாக இருக்கும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments