Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பாராட்டியதால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மான் பட நடிகை

Webdunia
வியாழன், 5 ஜூலை 2018 (14:01 IST)
நடிகை விஜய் பாராட்டியதால் பிரியா பவானி சங்கர் சந்தோஷத்தில் துள்ளி குதித்து கொண்டு இருக்கிறார்.
 
‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானிசங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ வரை சீரியல் மூலம் புகழ்பெற்றார்.
 
இதனையடுத்து, அவர் வைபவுக்கு ஜோடியாக நடித்த ‘மேயாத மான்’ படம், அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. தற்போது அவர் நடித்துள்ள கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் வெளியாகவுள்ளது.
 
இந்நிலையில், பிரியா பவானிசங்கரை நடிகர் விஜய் பாராட்டியுள்ளாராம். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நடிகர் விஜய்க்கு நன்றி. நான் காலை எழுந்தவுடன் இந்த செய்தியை பார்த்து யாரோ கலாய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், இது உணமையான தகவல் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். நான் இந்த அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும் தகுதியுடையவரா என்று தெரியவில்லை. ஆனால், இதற்காக கடினமாக உழைப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ரஜினிக்குக் கதை சொல்ல அந்த இயக்குனரை அனுப்பினேன்’… ஆனால்?- கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த தகவல்!

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments