சர்வதேச திரைப்பட விழாவில் ”வா அசுரா.. வா” – தனுஷ் மகிழ்ச்சி ட்வீட்

Webdunia
ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (14:26 IST)
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் நடித்த அசுரன் படம் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் அசுரன். மஞ்சு வாரியர், பசுபதி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் சமூக பாகுபாடுகள் நோக்கிய விமர்சனங்களை முன்வைத்ததாக பலரால் பாராட்டுகளை பெற்றதுடன், வசூலையும் குவித்தது.

இந்நிலையில் 51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் ஜனவரியில் தொடங்க உள்ளது. பல்வேறு பிரிவுகளில் பல்வேறு நாடுகளின் படங்கள் திரையிடப்படும் இந்த விழாவில் இந்தியன் பனோரமா என்ற பிரிவில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள தனுஷ் படக்குழுவினருக்கு தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments