Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றிமாறன் கதையில் நடிக்கும் ஜீ.வி.பிரகாஷ்

வெற்றிமாறன் கதையில் நடிக்கும் ஜீ.வி.பிரகாஷ்
, புதன், 6 மே 2015 (12:54 IST)
வெற்றிமாறன் படம் இயக்குகிறார் என்றால் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷாகதான் இருக்கும். அவர் தயாரித்து இயக்கியுள்ள விசாரணை படத்துக்கு பணம் வாங்காமல் ஜீ.வி. இசையமைத்து தந்துள்ளார்.
 

 
அதேநேரம் வெற்றிமாறன் அடுத்து இயக்கும் சூதாடியில் ஜீ.வி. கிடையாது. சூதாடியை தயாரிக்கும் தனுஷ் ஜீ.வி.க்குப் பதில் சந்தோஷ் நாராயணனை பரிந்துரை செய்ததால் வேறு வழியில்லாமல் முதல்முறை ஜீ.வி. இல்லாமல் படம் இயக்கப் போகிறார் வெற்றிமாறன்.
 
இந்த மாற்றம் வெற்றிமாறன், ஜீ.வி. உறவில் எந்த விரிசலையும் ஏற்படுத்தவில்லை. கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சங்கர் - குணா இணைந்து இயக்கும் புதிய படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் கதையை எழுதியிருப்பவர் வெற்றிமாறன்.
 
சங்கர் - குணா இருவரும் இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் என்பது முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil