வட சென்னை 2 எப்போது?… ஒருவழியாக அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (14:22 IST)
வெற்றிமாறன் தனுஷ் வெற்றிக்கூட்டணியில் அமைந்த முக்கியமான படமாக வடசென்னை அமைந்தது. இந்த படம் மொத்தம் 3 பாகங்களாக உருவாக இருந்த நிலையில் முதல் பாகம் மட்டுமே ரிலீஸானது. அடுத்த பாகங்களுக்கான அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த வாத்தி பட விழாவில் இதுபற்றி நடிகர் தனுஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ் “அதை நீங்க வெற்றிமாறன் அலுவலகத்துலதான் கேக்கனும். கண்டிப்பா வடசென்னை 2 வரும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக பா ரஞ்சித் தன்னுடைய சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்தார். பலரும் இதைக் கொண்டாடி வரும் நிலையில், இப்போது தனுஷ் ரசிகர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாக அப்டேட் கேட்டு #Vadachennai2 என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்ட் செய்தனர்.

இந்நிலையில் நேற்று விடுதலை படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்டு பேசி வெற்றிமாறனிடம் இதுபற்றி தொகுப்பாளர் அப்டேட் கேட்டார். அப்போது பேசிய வெற்றிமாறன் “விடுதலை இரண்டு பாகங்களும் ரிலீஸ் ஆனதும் வாடிவாசல் தொடங்கும். அதன் பின்னர் வடசென்னை 2 தொடங்கப்படும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments